Suyamvaram
Format: 15.2x22.9cm
Liczba stron: 172
Oprawa: Miękka
Wydanie: 2025 r.
Język: tamilski
Dostępność: dostępny

இந்த விளம்பரம் எனக்குப் பிடிக்காத ஒன்றுதான் ஆயினும் என்ன செய்வது? நீங்கள்தான் இப்போதெல்லாம் விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட விளம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களே!

'எழுத்தாளர்' என்றால் முன்னெல்லாம் எழுதாவிட்டால்கூட ஒரு கதர் ஜிப்பாவைத் தைத்துப் போட்டுக் கொண்டு விட்டால் போதும்; உடனே நீங்கள் அவரை எழுத்தாளர் என்று ஒப்புக்கொண்டு விடுவீர்கள். இப்போது அப்படியில்லை; நீங்கள் ஒருவரை எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமானால் அந்த எழுத்தாளர் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது!

முதலில் அவர் 'ஹிப்பி'களைப் பின்பற்றி முடி வளர்க்க வேண்டியிருக்கிறது; அப்படி வளர்த்த முடியை அவர் விதம் விதமாக அலங்கரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குப் பின் அவர் விதம் விதமாகச் சட்டை தைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது; அந்த விதம் விதமான சட்டைகளுடன் விதம் விதமான போஸ்களில் படம் எடுத்து, விதம் விதமான பத்திரிகைகளில் அவற்றை வெளியிடுவதற்கு வேண்டிய ஏற்பாடும் செய்யவேண்டியிருக்கிறது!

இவை மட்டுமா? விதம் விதமான பெண்களுடன் வேறு அவர் 'உலா' வர வேண்டியிருக்கிறது; தன்னால் முடியாவிட்டாலும் வேறு யாருடைய செலவிலாவது வீட்டுக்கு ஒரு டெலிபோனும், போக்குவரத்துக்கு ஒரு காரும் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

இத்தனையும் இல்லாத ஒருவன் என்னதான் எழுதிக் கிழித்தாலும் நீங்கள் எங்கே அவனை எழுத்தாளன் என்று மதிக்கிறீர்கள்? நீங்கள் எங்கே 'எழுத்தாளன்' என்று ஒப்பு கொள்கிறீர்கள்?

இந்த லட்சணத்தில் இது 'விளம்பர யுக'மாக மட்டுமல்ல, 'கவர்ச்சி யுக'மாகவும் இருந்து தொலைகிறது.

போகட்டும். நடந்ததை மறந்து கவனிப்போமா?...